தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) பல் சுகாதார நிபுணர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist) – 39
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது: 18 வயது
- அதிகபட்ச வயது: 32 வயது
- மாற்றுத்திறனாளிகள்: 42 வயது வரை
- முன்னாள் ராணுவத்தினர்: 48 வயது வரை
- எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசிஎம், பிசி பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:
* விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு “பல் சுகாதாரம் டிப்ளமோ” (Diploma in Dental Hygiene) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* தமிழ்நாடு மாநில பல் மருத்துவ கவுன்சிலில் (Tamil Nadu Dental Council) பதிவு செய்திருக்க வேண்டும்.
* மேலும், 2008-ம் ஆண்டு நெறிமுறைக்கு முன்பு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் மருத்துவ சான்றிதழ் (Dental Certificate) படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 11 கீழ் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
* நேர்காணல் இல்லை, எழுத்துத் தேர்வும் கிடையாது.
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
* அதாவது, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ / சான்றிதழ் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் (Merit List) வெளியிடப்படும்.
* பின்னர், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 02.11.2025.
Read more: மிகப்பெரிய Layoff-ஐ திட்டமிடும் அமேசான்! 15% வரை HR ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பணிநீக்கம்? ஷாக் தகவல்..