fbpx

பிறந்தநாள் பரிசாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு..!!

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் சென்று திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் சக்தியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார்.

எனவே இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு அவருக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை கருத்தில் கொண்டு பிறந்த நாள் பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் விரைவில் வழங்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

Chella

Next Post

’அலுவலகம் சென்றவர்கள் பாத்து வாங்க’..!! ’இன்னும் சில மணி நேரங்களில் சம்பவம் இருக்கு’..!! வானிலை ஆய்வு மையம்..!!

Mon Nov 27 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

You May Like