fbpx

’தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும்’..! உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேச்சு..!

இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

’தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும்’..! உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேச்சு..!

இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என்றும் அந்த வகையில், தென்னிந்தியாதான் பாஜகவின் அடுத்தக்கட்ட இலக்கு என்றும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Chella

Next Post

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்....

Mon Jul 4 , 2022
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ […]
தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! அதி கனமழை எச்சரிக்கை..!!

You May Like