12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி சிவலிங்கம் உடையும் அதிசய கோவில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

bijil mahadev

இந்தியாவில் பல பழமையான, அதிசயங்களுடன் கூடிய சிவன் கோவில்கள் உள்ளன. அதில் இமாச்சலப் பிரதேசம், குலு மாவட்டம் சேர்ந்த பிஜிலி மகாதேவ் ஆலயம் உலகத்திற்கு பிரபலமானது. இந்த கோவிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் மட்டும் 12 ஆண்டுகளில் ஒருமுறை மின்னல் தாக்கி உடைந்து நெறுங்கும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது.


மின்னல் தாக்கினாலும், கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படுவதில்லை, சிவ லிங்கம் மட்டும் துண்டு துண்டாக உடைகிறது. புராண கதைகளின்படி, ஒரு முறை குலந்த் என்ற அரக்கன் மலைப்பாம்பு வடிவம் எடுத்து பூமியில் வாழ்ந்த உயிரினங்களை துன்புறுத்தி வந்தான். மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வியாஸ் நதியையும் தடுத்து நிறுத்தினான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி இறக்க துவங்கின. இதை கண்டு கோபமடைந்த சிவ பெருமான் அந்த அரக்கனை வதம் செய்தார்.

இறந்த அரக்கனின் உடலே பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அரக்கனை வதம் செய்த பிறகு, இந்திரனை அழைத்த சிவ பெருமான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இடத்தில் மின்னல் தாக்க வேண்டும் என கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. சிவ பெருமான் இட்ட உத்தரவின் பேரிலேயே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மலை மீது அமைந்துள்ள கோவிலை மின்னல் தாக்குவதாக நம்பப்படுகிறது.

சிவலிங்கம் உடைந்த பிறகு கோவிலில் உள்ள புரோகிதர்கள் உடைந்த துண்டுகளை சேகரிப்பார்கள். சிறிது நாட்கள் கோவில் மூடப்பட்டிருக்கும். கடலை மாவு, பருப்பு, உப்பு சேர்க்காத வெண்ணெய் ஆகியவற்றை கலந்து பசை போல் செய்து சிவலிங்கத்தை ஒட்டுவர். பசை காய்ந்த பிறகு வழக்கமான அபிஷேகம், பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்படும். சில நாள்களில் சிவலிங்கம் முன்பு இருந்தது போலவே காட்சி தரும்.

Read more: உடலுறவின்போது அதை பார்த்த காதலி..!! உடனே போலீசுக்கு போக என்ன காரணம்..? ஆடிப்போன காதலன்..!!

English Summary

A miraculous temple where lightning strikes and breaks the Shivalinga every 12 years..!! Do you know where it is..?

Next Post

'அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்'!. ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

Mon Oct 20 , 2025
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ் ஆயுதங்களை களைவதற்கு கடுமையான காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், ஹமாஸ் தனது ஆயுதங்களை கீழே போடவில்லை என்றால், அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஹமாஸ் ஆயுதங்களை களைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளதா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர், “எந்தவொரு […]
20250214034154 Trump Don

You May Like