ஷாக்!. அதிபர் டிரம்பை கொல்ல சதி!. விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு முயற்சி!.

trump airport

அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.


பல்வேறு நாடுகன் விவகாரங்களில் தலையிட்டு வருவதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வானியாவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் குண்டு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த சம்பவம் நடந்த இரு மாதங்களுக்குப் பிறகு, கோல்ப் மைதானத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற 59 வயது ரியான் வெஸ்லே என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் அருகே, துப்பாக்கி ஒன்று தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் ரகசிய சேவை பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், உயரம் குறைவான படிக்கட்டுகளை பயன்படுத்தி விமானத்தில் ஏறினார்.

இது குறித்து ‘மேற்கு பாம் பீச்சிற்கு அதிபர் டிரம்ப் வருவதற்கு முன்பு, ஏர் போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் பகுதியை நோக்கி துப்பாக்கி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அமெரிக்க ரகசிய போலீசார் கண்டுபிடித்தனர்,’ என்று எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் இல்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Readmore: ‘இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும்!. டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

KOKILA

Next Post

பரபரப்பு...! சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...!

Mon Oct 20 , 2025
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள், விமானநிலையம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மர்ம நபர்கள் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், வெடிகுண்டு […]
DMK office 2025

You May Like