தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த போர்க்கொடி..! இபிஎஸ்-ன் முடிவு என்ன..?

eps vijay 1

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.. 


இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. அதே போல் அதிமுக உடனும் தவெக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுகவில் போர்க்கொடி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது..

சி.வி. சண்முகத்திற்கு ஆதரவாக எஸ்.பி. வேலுமணியும் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதற்காக இன்று சி.வி சண்முகம் – எஸ். பி. வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினர்.. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சி.வி. சண்முகத்துடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்..

தவெகவுக்கு ஆதரவளித்து கூட்டணி ஆட்சி அமைத்தால் தான் ஆட்சியில் இடம்பெற முடியும் என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இபிஎஸ்-இடம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.. ஆனால் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம், கூட்டணி ஆட்சி அமைத்தால் பல்வேறு சிக்கல்கள் வரக்கூடும் என்று இபிஎஸ் கூறி வருகிறாராம்..

RUPA

Next Post

மக்களால் நிராகப்பட்டவர்களுடன் துணை நிற்க வேண்டுமா..? மீண்டும் திமுக சீண்டிய மாணிக்கம் தாகூர்..!

Wed May 6 , 2026
2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் […]
manickam tagore stalin

You May Like