புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய வேகத்திலேயே அது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால், சில மாதங்களிலேயே போனின் வேகம் குறையத் தொடங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம், போனில் குவியும் தேவையற்ற தரவுகளும் (Clutter), பின்னணியில் இயங்கும் செயலிகளுமே (Background Apps) ஆகும். உங்கள் போனைப் புதிதாக வாங்கிய வேகத்துக்கு மீண்டும் கொண்டு வர சில எளிய பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம்.
கேட்ச் (Cache) கோப்புகளை நீக்குங்கள் :
நாம் ஒவ்வொரு முறை ஒரு செயலியைப் பயன்படுத்தும்போதும் அல்லது இணையதளத்தைப் பார்வையிடும்போதும், அதனுடன் தொடர்புடைய தற்காலிகக் கோப்புகள் போனில் சேமிக்கப்படுகின்றன. இதுவே ‘கேட்ச்’ எனப்படும். நாளடைவில் இவை அதிகமாகச் சேருவது போனின் வேகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அனைத்துச் செயலிகளுக்கும்: உங்கள் போனின் ‘Settings’ சென்று, ‘Storage’ பகுதிக்குச் சென்று, ஒட்டுமொத்த ‘Cached Data’-ஐ ஒரே கிளிக்கில் நீக்கலாம்.
தனித்தனிச் செயலிகளுக்கு : குறிப்பிட்ட செயலியின் வேகத்தைச் சரிசெய்ய, ‘Settings’ > ‘Apps’ பகுதிக்குச் சென்று, அந்தச் செயலியைக் கிளிக் செய்து, ‘Storage’ ஆப்ஷனில் உள்ள ‘Clear Cache’ பொத்தானை அழுத்தவும். இதை அடிக்கடி செய்வதன் மூலம் போனின் வேகம் மேம்படும்.
பயன்படுத்தாத செயலிகளை உடனடியாக நீக்குங்கள் :
உங்கள் ஸ்மார்ட்போனில் பல மாதங்களாக நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் இருக்கலாம். இந்தச் செயலிகள் வெறும் சேமிப்பகத்தை (Storage) வீணாக்குவது மட்டுமல்லாமல், பின்னணியில் இயங்கிக்கொண்டு போனின் பேட்டரியையும், ரேம் (RAM)-ஐயும் தேவையில்லாமல் பயன்படுத்தும். பயன்படுத்தாத (Unused Apps) செயலிகளை உடனடியாக நீக்குவது, ரேமை விடுவித்து, உங்கள் போனின் ஒட்டுமொத்தச் செயல்திறனை உடனடியாக அதிகரிக்கும்.
விட்ஜெட்டுகள் மற்றும் லைவ் வால்பேப்பர்களைத் தவிர்க்கவும் :
ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனில் அலங்காரத்திற்காக நீங்கள் பயன்படுத்தும் விட்ஜெட்டுகள் (Widgets) மற்றும் லைவ் வால்பேப்பர்களும் (Live Wallpapers) ரேம்-ஐப் பயன்படுத்துகின்றன. இவை பேட்டரியையும் வேகமாகத் தீர்க்கும். போனின் வேகத்தை அதிகரிக்க விரும்பினால், அனிமேஷன் செய்யப்பட்ட லைவ் வால்பேப்பர்களைத் தவிர்த்துவிட்டு, சாதாரண ஸ்டாட்டிக் வால்பேப்பர்களைப் பயன்படுத்துங்கள். மேலும், அவசியம் இல்லாத விட்ஜெட்டுகளை நீக்கி, ஹோம் ஸ்கிரீனை எளிய முறையில் வைத்திருப்பது செயல்திறனைப் பாதுகாக்கும்.
வாரத்திற்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்யுங்கள் :
உங்கள் ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்க எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழி, அதை அடிக்கடி ரீஸ்டார்ட் (Restart) செய்வதுதான். நீங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யும்போது, ரேமில் தேங்கி நிற்கும் தேவையற்ற தற்காலிகத் தரவுகளும் (temporary data) மற்றும் சிஸ்டத்தில் உள்ள சிறிய பிழைகளும் நீக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது போனை ரீஸ்டார்ட் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் போன் நீண்ட காலத்திற்குத் தொய்வில்லாமல் வேகமாகச் செயல்பட உறுதுணையாக இருக்கும்.
Read More : கொழுந்தனாரின் ஆணுறுப்பை அறுத்து தூக்கி வீசிய அண்ணி..!! விசாரணையில் திடுக்கிட வைக்கும் காரணம்..!!



