fbpx

“எப்புட்றா.”! இளைஞரின் மூளையில் “சாப்ஸ்டிக்ஸ்”.! மருத்துவர்கள் குழப்பம்.! நடந்தது என்ன.?

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் உணவு சாப்பிட பயன்படும் சாப் ஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அந்தக் குச்சி அகற்றப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் தலைவலி மற்றும் மயக்கம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மூலம் அவரது மூளையில் சாப் ஸ்டிக் இருப்பதை கண்டறிந்தனர். எனினும் இந்த குச்சி எப்படி அவரது மூளைக்கு சென்றது என்பது மருத்துவர்களுக்கே புரியவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் கூர்மையான பொருளால் தனது மூக்கில் தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். அப்போது உடைந்த சாப் ஸ்டிக் துண்டுகள் மூக்கின் வழியாக அவரது மூளையை சென்றடைந்து இருக்கிறது என மருத்துவர்கள் தெரிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மூளையில் இருந்த குச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது அந்த நபர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த நபருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Post

"பசங்கள கூட விட மாட்டீங்களா".? 6 வயது சிறுவனை நாசம் செய்த 47 வயது கொடூரன்.! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி.!

Thu Nov 30 , 2023
சிவகங்கை மாவட்டத்தில் ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 47 வயது நபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது போக்சோ நீதிமன்றம். இது தொடர்பான பரபரப்பு தீர்ப்பு நேற்று வெளியானது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான ஜஹாங்கீர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவனை தூக்கிச் சென்று பாலியல் […]

You May Like