தமிழகத்தில் நடத்தப்பட இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக புதிய ஆணை வெளியாகி இருக்கிறது. மேலும் தேர்வு நடப்பதற்கான புதிய தேதியில் இந்த ஆணையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட வாரியாக நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் சென்னையில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக டிசம்பர் மூன்றாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வானிலை அறிக்கையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே மாநிலம் முழுவதும் பல இடங்களில் விதமான மற்றும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.