fbpx

உங்க நகங்களை கவனித்து இருக்கிறீர்களா.? நகங்களின் நிறத்தை வைத்தே உடலில் என்ன பாதிப்பு என்று தெரிந்துக் கொள்ளலாம்.!

உலகில் உள்ள மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் விரல்களின் நுனிகளை மறைத்தவாறு நகங்கள் இருக்கும். இவை இந்த விரல்களை பாதுகாக்கவும் தொடு உணர்வுகளுக்காகவும் வைக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நகங்கள் ஆல்பா கெரட்டின் என்ற கடினமான புரதங்களால் ஆனது. பொதுவாகவே நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். சிலருக்கு நகங்களின் நிறங்கள் வேறுபட்டிருக்கும். நகங்களின் நிறங்களை வைத்து ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிய முடியும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது நகங்களின் வளர்ச்சி குறைந்து சிவப்பு நிறமாக இருக்கும். மேலும் மஞ்சக்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நகங்கள் நித்தியான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நகங்கள் நீல நிறமாக இருந்தால் ரத்தத்தில் நச்சுத்தன்மை அல்லது நுரையீரல் பாதிப்பாக இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு கல்லீரல் பிரச்சனை மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் நகங்கள், கருப்பு நிறமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது ரத்த சோகையின் அறிகுறியாகவும். ஒருவரின் உடலில் புரோட்டின் சக்தி குறைவாக இருந்தாலும் அவரது நகங்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். அலர்ஜி மற்றும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களது கைவிரலின் நகங்கள் பச்சை நிறமாக இருக்கும். சுவாசப் பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நகங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும் இந்த அறிகுறிகளின் மூலம் அவர்களுக்கு அந்த நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதை அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் புகைப்பிடிப்பவர்களின் நகங்களும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . இது உடலில் நிக்கோட்டின் அளவு அதிகரித்திருப்பதை காட்டுவதாகும்

ஒருவரின் நகங்களில் இருக்கும் நிறங்களை வைத்து அவருக்கு இந்த நோயின் தொற்று இருக்கலாம் கூற முடியும். எனினும் அந்த நோய் இருப்பதை உறுதி செய்ய மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பதே சரியாக இருக்கும். அதனால் நகங்களின் நிறத்தை வைத்துக் கொண்டு நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்று அச்சப்படாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே சரியான அணுகுமுறை ஆகும்.

Next Post

"உங்களுக்கு மட்டும் குரல் கேட்குதா.?, மன பிரம்மை இருக்கா.?" இந்த வைட்டமின் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.!

Fri Dec 1 , 2023
ஹாலுசினேசன் என்பது நமது புலன்கள் மற்றும் நிகழ்வுகளின் தவறான கருத்தாகும். இது மனதின் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இல்லாத ஒரு விஷயம் இருப்பது போன்று தோன்றுவது தான் இந்த மாயத்தோற்றம். இது பெரும்பாலும் வேதியியல் எதிர்வினைகள் அல்லது மூளையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களால் நிகழ்கிறது. பொதுவாக ஹாலுசினேசன் ஒருவருக்கு தூக்கத்தில் நடப்பது அல்லது கனவு காண்பது போன்ற சாதாரண நிகழ்வுகளாக இருந்தாலும் பலருக்கு மிகக் கடுமையான […]

You May Like