இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவில் நுழைந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்!. பிரதமர் மார்க் கார்னி அதிரடி!

israel pm canada pm 1

போர்க்குற்றம் செய்தது தொடர்பான வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவில் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என்று பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.


காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது. அதேசமயம் அவருக்கு எதிரான கைது வாரண்ட் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நேதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச கோர்ட்டின் பிடிவாரண்டை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: FLASH | கனமழை எதிரொலியால் மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை..!! முழு லிஸ்ட் இதோ..!!

KOKILA

Next Post

கள்ளத்தொடர்பில் மனைவி..? உடலை டிரம்மில் போட்டு சுடுகாட்டில் புதைத்த கணவன்..!! 2 மாதங்களாக நாடகமாடிய திடுக்கிடும் சம்பவம்..!!

Wed Oct 22 , 2025
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டராகப் பணிபுரியும் இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும் (26) இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக, பிரியாவின் நடத்தை மீது சிலம்பரசனுக்குச் சந்தேகம் ஏற்படவே, கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த பிரியா, பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதும், பின்னர் சமாதானமாகி கணவருடன் […]
Crime 2025 9

You May Like