மக்களே கவனம்.. இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழை கொட்டி தீர்க்கும்.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..

tn rains new

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது..


இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

மேலும் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப்பிரதேச கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RUPA

Next Post

'ஜிஹாத்'-க்கு பெண்களைச் சேர்க்க ஆன்லைன் படிப்புகளை தொடங்கிய ஜெய்ஷ் இ அமைப்பு; பயிற்சிக்கு தலைமை தாங்குவது இவர்கள் தானாம்!

Wed Oct 22 , 2025
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), தனது பெண்கள் படைப்பிரிவான ‘ஜமாத் உல்-முமினாத்’-க்கு ஆட்களைச் சேர்த்து நிதி திரட்டுவதற்காக ‘துஃபத் அல்-முமினாத்’ என்ற ஆன்லைன் பயிற்சிப் பாடத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பாடநெறி ஜெய்ஷ்-ஐ ‘பலப்படுத்துவதையும்’ அதன் பெண்கள் படைப்பிரிவில் பெண்களைச் சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 8 முதல் தொடங்கும் இந்த ஆன்லைன் பாடத்திட்டத்தின் கீழ், மசூத் அசார் உட்பட உயர்மட்ட ஜெய்ஷ் […]
masood azhar 1761118309 1

You May Like