AI நமது சமூகத்தை மாற்றி வருகிறது. இதற்கு முன் மனித உள்ளீட்டைச் சார்ந்திருந்த பல பணிகளை AI செய்ய முடியும். இது பணியிடத்தில் மனிதர்களை விரைவில் மாற்றக்கூடும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த பயம் நியாயமற்றது அல்ல, TCS மற்றும் Accenture போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இப்போது, தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க் அனைத்து வேலைகளும் மாற்றப்படும் என்று கூறியுள்ளார், ஆனால் இது உண்மையில் மனிதர்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களை AI மற்றும் ரோபோக்களால் மாற்றும் அமேசானின் திட்டங்கள் குறித்த சமீபத்திய அறிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அமேசான் நிறுவனம் 2027 ஆம் ஆண்டுக்குள் 1,60,000 க்கும் மேற்பட்ட வேலைகளை ரோபோக்களால் குறைக்க திட்டமிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.. இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் “AI மற்றும் ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் மாற்றும்.” என்று பதிவிட்டுள்ளார்..
ஆனால் இருண்ட எதிர்காலத்திற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்து மனிதகுலம் விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக ட்ரம்ப் இதை பார்க்கிறார்.. “காய்கறிகளை கடையில் வாங்குவதற்குப் பதிலாக, அவற்றை வளர்க்கும் அளவுக்கு மனிதர்களுக்கு நேரமிருக்கும்.. நம் வாழ்க்கையைத் தக்கவைக்க பணம் சம்பாதிக்க நாம் அனைவரும் வேலை செய்கிறோம். AI உடன், வேலை செய்வது மனிதர்களுக்கு விருப்பத்திற்குரியதாக மாறும்..” என்று மஸ்க் குறிப்பிட்டார்.
மேலும், உலகம் “உலகளாவிய உயர் வருமானம்” கொண்டிருக்கும் என்று கூறினார். அடிப்படையில், எதிர்காலத்தில், AI வேலைகளை எடுத்துக் கொள்ளும்போது, மனிதர்கள் அதிக வருமான நிலைகளைக் கொண்டிருப்பார்கள், அது வேலை செய்யாமல் தங்கள் வாழ்க்கை முறையைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் என்று எலான் மஸ்க் சுட்டிக்காட்டினார்.
AI அனைத்து வேலைகளையும் செய்கிறது, மேலும் மனிதர்கள் வாழ்க்கையை வெறுமனே அனுபவிக்க முடியும். மஸ்க் கடந்த காலத்தில் அத்தகைய சாத்தியத்தை குறிப்பிட்டுள்ளார். பாரிஸில் நடந்த விவாடெக் 2024 மாநாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றாக்குறை இல்லாமல், அத்தகைய எதிர்காலத்திற்கு 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதை அடைவதற்கான ஒரு வழி தனிப்பட்ட ரோபோக்கள் மூலமாக இருக்கலாம். ஆகஸ்ட் 2024 இல் ஒரு பதிவில், ஒவ்வொரு மனிதனுக்கும் தங்களின் சொந்த R2-D2 மற்றும் C-3PO” இருக்கலாம் என்று எலோன் மஸ்க் கூறியிருந்தார். R2-D2 மற்றும் C-3PO ஆகியவை ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடரிலிருந்து வரும் இரண்டு ரோபோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



