பி.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர உள்ளது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றிய நிலையில் தற்போது ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் ஒரு பகுதியான இந்த மாற்றம், 2026-27 முதல் நடைமுறைக்கு வரும், இது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் பணிக்கான விரைவான வழிகளை மீண்டும் வழங்குகிறது. இந்த நிலையில் பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராஜசேகரன் அனுப்பிய சுற்றறிக்கையில்: 2025-26-ம் கல்வி ஆண்டில் பிஎட். மற்றும் பிஎட். (சிறப்புக் கல்வி) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் தகுதி கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அக்டோபர் 27-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதற்குமேல் காலநீட்டிப்பு வழங்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



