மீனாவின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை யார் கவனிப்பது என்பதில் மீனா மற்றும் சீதா இடையே மோதல் ஏற்பட்டது. மீனா, தானே அம்மாவை கவனிபதாக கூறுகிறாள், ஆனால் சீதா தன்னுடைய வீட்டில் அம்மாவை அழைத்து சென்று கவனிப்பதாக கூறுகிறார். இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், முத்து, “அத்தை சீதா வீட்டுக்கே செல்லட்டும். அங்கே சென்றாலாவது சீதாவின் கோபம் குறையும்” என கூறி சமாதானப்படுத்துகிறார்.
இதற்கிடையில், ஆஸ்பத்திரி மேனேஜர், அங்கு பணிபுரியும் சீதாவிடம் ரூ.5 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்லி, ஒருவரை பாதுகாப்பு அதிகாரியாக அனுப்புகிறார். செல்லும் வழியில், அந்த செக்யூரிட்டிக்கு திடீரென மகனை நாய் கடித்ததாக போன் வருகிறது. இதனால் அவர் பதறி மகனைப் பார்க்க செல்கிறார்.அவரிடம் சீதா, “நீங்கள் போய் பையனைப் பாருங்க, நான் பத்திரமா பணத்தை டெபாசிட் பண்ணிவிடுகிறேன்” என சொல்லி தனியாக ஆட்டோவில் செல்கிறார்.
அந்த நேரத்தில், இரண்டு ரெளடிகள் ஆட்டோவை மடக்கி, சீதாவிடம் இருந்த பணத்தை பறிக்கிறார்கள். அதிர்ச்சியில் சீதா நடுரோட்டில் அழுதபடி நிற்கிறார். அந்த வழியாக சென்ற மீனா, சீதாவிடம் நடந்ததை கேட்டபின், அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார்.
ஆனால், சீதாவின் விளக்கத்தை நம்ப மறுக்கும் மேனேஜர், “5 லட்சம் இப்படி தொலைச்சிட்டு வருறியா?” என திட்டுவதோடு, அவளை வேலையிலிருந்து நீக்குவதாகவும் கூறுகிறார். மேலும், “நீயே திட்டமிட்டு பணத்தை திருடிட்டியா?” என கேட்க, கண்ணீருடன் நிற்கிறார் சீதா. இதனால் கோபமடைந்த மீனா, மேனேஜரை கண்டித்து பேசுகிறார். அதற்கு மேனேஜர், “நீயும் கூட்டுக் களவாணியா?” என கேட்கிறான்.
நாளைய எபிசோட்டுக்கான புரோமோவில், சீதாவுடன் போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் அருண், யாரோ பண்ண திருட்டுக்கு நீங்க ஏன் சீதாவை குற்றவாளி மாதிரி நிக்க வைக்குறீங்க.. அந்த ரவுடி இனி கிடைக்க மாட்டான் என சொல்கிறான். உடனே அங்கு வந்த முத்து அதெல்லாம் ரவுடி மாட்டிக்கிட்டான் என சொல்ல அருண் அரண்டு போய் நிற்கிறான். அந்த ரூ.5 லட்சத்தை திருட சொன்னது யார்..? என்பதற்கான கேள்வி அடுத்தடுத்த எபிசோட்டில் தெரிய வரும்.
Read more: புதிய விதி.. பயணிகள் இந்த பொருளை விமானங்களில் எடுத்து செல்வதற்கு தடை? DGCA முக்கிய முடிவு..



