பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…! வெளியான தேதி…!

college 2025 1

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளன.

இதில் முதல்கட்ட முதன்மைத் தேர்வு 2026 ஜனவரி 21 முதல் 30-ம் தேதிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அதேபோல், 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஏப். 1 முதல் 10-ம் தேதிக்குள் நடத்தப்படும். மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறிப்பாக மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஜாக்கிரதை!. இறைச்சியில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்கள்!. சிறுநீரகத்திற்கு பெரும் ஆபத்து!. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Fri Oct 24 , 2025
ஐந்தில் ஒரு சிறுநீர் பாதை நோய்த்தொற்று மாசுபட்ட இறைச்சியால் ஏற்படக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. குறிப்பாக கோழி மற்றும் வான்கோழியில் காணப்படும் ஈ. கோலி பாக்டீரியா, கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவது வெறும் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்புடனும் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, […]
meat UTI 1

You May Like