Flash : ஷாக்..! இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold prices

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் மீண்டும் குறைந்தது.. குறிப்பாக கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.3,700 வரை தங்கம் விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ.11,540க்கு விற்பனையாகிறது.. இதனால் இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

ஆனால் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.171க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வலுவடைய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

RUPA

Next Post

ரூ.1.5 கோடி சம்பளம்.. வாரத்தில் 42 மணி நேரம் மட்டும் தான் வேலை..!! சலுகைகளை வாரி வழங்கும் நாடு எது தெரியுமா..?

Fri Oct 24 , 2025
Salary of Rs. 1.5 crore.. Working only 42 hours a week..!! Do you know which country offers benefits?
iland 1 1 1 1

You May Like