5 ஆண்டுகளில் ரூ. 58 லட்சம் சம்பாதிக்கலாம்.. லாபத்தை வாரி வழங்கும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!

671332c659f51 post office schemes 282848327 16x9 1

நாட்டில் பங்குச் சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் பொதுமக்களின் சேமிப்பு மனநிலையை பெரிதும் பாதித்துள்ளன. இந்நிலையில், தபால் நிலையங்கள் வழியாக வழங்கப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டம், மக்கள் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தும் ஒரு பாதுகாப்பான வழியாக மாறியுள்ளது.


இந்தத் திட்டம், முழுமையாக அரசு உத்தரவாதத்துடன் செயல்படுவதால், முதலீட்டில் எந்த ஆபத்தும் இல்லாதது இதன் முக்கிய சிறப்பு. தற்போது அரசால் அறிவிக்கப்பட்ட 7.7% வட்டி வீதம், மற்ற சேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது சிறந்த வருமான வாய்ப்பாக கருதப்படுகிறது.

மேலும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறும் வசதி இதனை மேலும் சிறப்பாக்குகிறது. இதனால், ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் ஆகியோருக்கு இது மிகச் சிறந்த திட்டமாகும்.

ரூ. 58 லட்சம் ஈட்டுவது எப்படி? ஒரு முதலீட்டாளர் ஐந்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ. 45 லட்சம் ஆக இருக்கும். தற்போதைய 7.7% வட்டி விகிதத்தின்படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முதலீட்டின் முதிர்வு மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 58 லட்சத்தை எட்டும். அதாவது, வட்டி மூலம் மட்டுமே சுமார் ரூ. 13 லட்சம் சம்பாதிக்க முடியும்.

இதே ஒரு நபர் 2025-இல் ரூ. 1,00,000 தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) முதலீடு செய்தால், 7.7% வட்டி விகிதத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, முதிர்வு தொகை சுமார் ரூ. 1,45,000 ஆக இருக்கும். இங்கு வட்டி மூலம் கிடைக்கும் லாபம் சுமார் ரூ. 45,000. இதேபோல், அதிக தொகையை முதலீடு செய்யும் போது, அதற்கேற்றவாறு முதிர்வு தொகையும் அதிகரிக்கும்.

Read more: புதன் – சுக்கிரன் சேர்க்கை; இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..! இனி பண மழை தான்!

English Summary

In 5 years, you can earn Rs. 58 lakhs.. Amazing post office scheme that offers profit sharing..!!

Next Post

20 ஆண்டுகளில் 5 கோடி சம்பாதிக்கணுமா? அதற்கு மாதத்திற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும்?

Fri Oct 24 , 2025
20 வருடங்களில் ரூ. 5 கோடி சேமிக்க விரும்புகிறீர்களா? ஆனால் இப்போதிருந்தே சேமிக்கத் தொடங்க வேண்டும். அதுவும் திட்டமிடப்பட வேண்டும். ரூ. 5 கோடி செல்வம் ஒரு பெரிய இலக்காகத் தோன்றலாம். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்தால் அது சாத்தியமாகும். SIP என்பது முறையான முதலீட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது. இது கூட்டுத்தொகை கொள்கையுடன் முதலீட்டை அதிகரிக்கிறது. சந்தை குறைவாக இருக்கும்போது, ​​நீங்கள் அதிக அலகுகளை […]
gaf33b380bd193274f5addd948a656320d4388d2113370a150 1736331295741 1738746786053

You May Like