மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளி (EMRS), ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 2025 ESSE அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த 7,267 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பணியிட விவரம்:
- தலைமை ஆசிரியர் – 225
- முதுகலை ஆசிரியர் – 1,460
- பட்டதாரி ஆசிரியர் – 3,962
- பெண் செவிலியர் – 550
- விடுதி காப்பாளர் – 635 (ஆண்கள் – 346, பெண்கள் – 289)
- கணக்காளர் – 61
- இளநிலை செயலக உதவியாளர் (JSA) – 228
- ஆய்வக உதவியாளர் – 146
- மொத்தம் – 7,267
வயது வரம்பு:
* தலைமை ஆசிரியர் பதவிக்கு வயது அதிகபடியாக 50 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
* முதுகலை ஆசிரியர் பதவிக்கு 40 ஆகவும், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இசை, நூலகம், உடற்கல்வி, செவிலியர் ஆகிய பதவிகளுக்கு 35 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
* கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
கல்வித்தகுதி:
தலைமை ஆசிரியர்: பட்டப்படிப்பு + பி.எட்; தலைமை ஆசிரியராக அனுபவம் இருக்க வேண்டும்.
முதுகலை ஆசிரியர்: அந்தந்த பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பு + பி.எட்; அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர்: இளநிலை பட்டப்படிப்பு + பி.எட் தேர்ச்சி + CTET தகுதி.
கலை, இசை, நூலகம் பிரிவுகள்: இளங்கலை பட்டப்படிப்பு.
உடற்கல்வி ஆசிரியர்: பி.எட் தகுதி.
செவிலியர்: தொடர்புடைய இளங்கலை பட்டப்படிப்பு.
விடுதி காப்பாளர்: ஏதேனும் பட்டப்படிப்பு.
கணக்காளர்: பி.காம் முடித்திருக்க வேண்டும்.
இளநிலை செயலக உதவியாளர் (JSA): 12-ம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சு திறன்.
ஆய்வக உதவியாளர்: 10-ம் வகுப்பு தேர்ச்சி + டிப்ளமோ/சான்றிதழ் அல்லது 12-ம் வகுப்பில் அறிவியல் பாடம்.
சம்பளம்:
- தலைமை ஆசிரியர்: 78,800 – 2,09,200
- முதுகலை ஆசிரியர்: 47,600 – 1,51,100
- பட்டதாரி ஆசிரியர்: 44,900 – 1,42,400
- பெண் செவிலியர்: 29,200 – 92,300
- விடுதி காப்பாளர் (ஆண்கள் – 346, பெண்கள் – 289): 29,200 – 92,300
- கணக்காளர்: 35,400 – 1,12,400
- இளநிலை செயலக உதவியாளர் (JSA): 19,900 – 63,200
- ஆய்வக உதவியாளர்: 18,000 – 56,900
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இரண்டு கட்டத் தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தலைமை ஆசிரியர் பதவிக்கு நேர்காணல் மற்றும் இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு திறன் தேர்வு நடைபெறும். முதல் கட்டத் தேர்வு கொள்குறி வகையிலும், இரண்டாம் கட்டத் தேர்வு கொள்குறி மற்றும் விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு http://nests.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.2,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 28.10.2025 கடைசி தேதியாகும்.



