Flash : நகைப்பிரியர்களே குட்நியூஸ்.. மீண்டும் சரசரவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..

gold jewelery

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ.11,450க்கு விற்பனையாகிறது.. இதனால் இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.91,600-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : FLASH | 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! மாணவர்களுக்கு விடுமுறையா..? அறிவிப்பு வராததால் குழப்பம்..!!

RUPA

Next Post

மோன்தா புயல்.. கனமழை பெய்யுமா? சென்னை மக்கள் கவலைப்பட வேண்டுமா? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்..!

Mon Oct 27 , 2025
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 560 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் காக்கிநாடாவுக்கு 620 கி.மீ, தெற்கு தென் கிழக்கிலும், விசாகப்பட்டினத்திற்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.. முன்னதாக 16 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் […]
tamilnadu weatherman cyclone

You May Like