மத்திய அரசின் ரயில்வே துறையில் தற்போது பெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்பம் சாராத (Non-Technical) பிரிவுகளில் மொத்தம் 8,858 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.
காலியிடங்கள்:
- Chief Commercial – Ticket Supervisor (சீப் கமர்ஷியல் – டிக்கெட் மேற்பார்வையாளர்)
- Station Master (ஸ்டேஷன் மாஸ்டர்)
- Goods Train Manager (சரக்கு ரயில் மேலாளர்)
- Junior Account Assistant – Typist (இளைய கணக்கு உதவியாளர் – தட்டச்சர்)
- Senior Clerk – Typist (மூத்த எழுத்தர் – தட்டச்சர்)
- Commercial – Ticket Clerk (கமர்ஷியல் – டிக்கெட் கிளார்க்)
- Accounts Clerk – Typist (கணக்கு எழுத்தர் – தட்டச்சர்)
- Junior Clerk – Typist (இளைய எழுத்தர் – தட்டச்சர்)
- Trains Clerk (ரயில்கள் கிளார்க்)
ஊதியம்: இந்த பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ. 35,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும், HRA, TA உள்ளிட்ட பல்வேறு அலவன்ஸ்கள், பணி நிலைத்தன்மை, பதவி உயர்வு போன்ற சிறப்புகள் உண்டு.
கல்வித் தகுதி: குறைந்தபட்சமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயது வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இடஓதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: RRB தேர்வுகள் பெரும்பாலும் 2 அல்லது 3 கட்டங்களாக நடைபெறும்.
1. CBT – கணினி வழித் தேர்வு,
2. Physical Test (RPF, Group D போன்ற தேர்வுகளுக்கு),
3. Typing/Skill Test (NTPC போன்ற தேர்வுகளுக்கு),
4. Document Verification5. Medical Examination
கடைசி தேதி: நவம்பர் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.



