வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 520 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளது… அதன்படி மோன்தா புயல் தற்போது 18 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது..
இந்த புயல் நாளை காலை தீவிர புயலாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த புயல் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.. புயல் கரையை கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இன்றும் நாளையும் சென்னையில் கனமழை தொடரும் எனவும், நாளை திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More : கரூர் கூட்ட நெரிசல்: புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் மனு வாபஸ்.. தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்..!



