மத்திய அரசின் மின்சாரத் துறையின் கீழ் இயங்கும் பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது சட்டப் பயிற்சி அதிகாரி (Officer Trainee – Law) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அனுபவம் தேவையில்லை; சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
பயிற்சி அதிகாரி (சட்டம்) – 7
வயது வரம்பு: பயிற்சி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 05.12.2025 தேதியின்படி, 28 வயதை நிரம்பி இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு 3 ஆண்டு எல்.எல்.பி அல்லது 5 ஆண்டு ஒங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
* பயிற்சி அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் ரூ.40,000. இதனுடன் 12 சதவீத வீட்டுக்கால கொடுப்பனை (HRA), அகவிலைப்படி (DA), போக்குவரத்து மற்றும் இதர நலன்களும் வழங்கப்படும்.
* இதனால் பயிற்சி காலத்தில் வருடத்திற்கு சுமார் ரூ.11 லட்சம் வருமானம் கிடைக்கும்.
* பயிற்சி வெற்றிகரமாக முடித்த நபர்கள் நிர்வாகப் பிரிவில் (Executive cadre) நியமிக்கப்படுவார்கள். அப்போது சம்பள அளவு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கும். இதனுடன் அனைத்து அலவன்ஸ்கள் மற்றும் ஊதியப் பாகங்களும் சேர்ந்து வருடத்திற்கு சுமார் ரூ.22.50 லட்சம் வருமானம் கிடைக்கும்.
* பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய நிதி, விடுப்பு பயண கொடுப்பனை (LTC), மற்றும் ஊழியர் நலன்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை;
* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயமாக முதுகலை சட்டப் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வு (CLAT – 2026) எழுத வேண்டும். அந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் அடுத்த கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
* பொதுப் பிரிவினருக்கு (General category): குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும்.
* மற்ற பிரிவினருக்கு (SC/ST/OBC/PwBD): குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெறுவது அவசியம்.
* கிளாட் தேர்வு மதிப்பெண்கள் 85 சதவீதம், குழு கலந்துரையாடல் 3 சதவீதம் மற்றும் நேர்காணல் 12 சதவீதம் என்ற அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு (Medical Examination) உட்படுத்தப்படுவார்கள். இதன் முடிவின் அடிப்படையில் இறுதி நியமனம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள விண்ணப்பதார்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் கிளாட் தேர்வு விண்ணப்ப பதிவு எண் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 05.12.2025.
Read more: “மும்பையை விழுங்க வரும் அனகோண்டா”..!! அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே..!!



