fbpx

மிக்ஜாம் புயல் எதிரொலி..!! 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

மிக்ஜாம் புயல், தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நேற்று கடந்தது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டிசம்பர் 9ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

’அலட்சியம், பேராசையே வெள்ளத்துக்கு காரணம்’..!! ’10 ஆண்டுகளாக இதே நிலைதான்’..!! சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்..!!

Wed Dec 6 , 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிப்போயினர். பொதுமக்களைப் போல் சினிமா பிரபலங்களும் இந்த பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். நடிகர் விஷால் தன்னுடைய வீட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதாக குறிப்பிட்டு மேயர் பிரியாவை விமர்சித்து இருந்தார். இதேபோல் நடிகர் விஷ்ணு விஷால், அமீர் கான் ஆகியோரும் […]

You May Like