ரூ.50,000 வரை சம்பளம்.. தேர்வு கிடையாது.. இந்து சமய அறநிலையத் துறையில் வேலை..!! உடனே விண்ணப்பிங்க..

job 2

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பணியிட விவரம்:

  • இளநிலை உதவியாளர் – 10
  • கூர்க்கா – 2
  • திருவலகு – 4
  • கால்நடை பாரமரிப்பாளர் – 2
  • பெரிய சன்னதி உடல் – 1
  • பெரிய சன்னதி வீரவண்டி – 1
  • பெரிய சன்னதி சேமக்கலம் மற்றும் இதர வாத்தியங்கள் – 1
  • தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் – 1
  • உதவி யானைப்பாகன் – 2
  • சலவையாளர் – 1
  • கூட்டுபவர் – 6

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 45 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இளநிலை உதவியாளர்: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி அவசியம்.

பெரிய சன்னதி உடல், வீரவண்டி, சேமக்கலம், தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியப் பிரிவு பணியிடங்கள்: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகரித்த இசைப் பள்ளி அல்லது சமய நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர், உதவி யானைப்பாகன், சலவையாளர், கூட்டுபவர்: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

  • இளநிலை உதவியாளர் / இசைக் கருவி வாசிப்பவர்கள் – ₹18,500 முதல் ₹58,600 வரை
  • கூர்க்கா / திருவலகு / கால்நடை பராமரிப்பாளர் – ₹15,900 முதல் ₹50,400 வரை
  • உதவி யானைப்பாகன் / சலவையாளர் – ₹11,600 முதல் ₹36,800 வரை
  • கூட்டுபவர் – ₹10,000 முதல் ₹31,500 வரை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் கணக்கிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

* விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், முகவரி ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

* மேலும், விண்ணப்பதாரர் மீது எந்தவித குற்றவியல் வழக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் காவல் நிலையச் சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும்.

* விண்ணப்ப அஞ்சல் உறையில் பணியின் பெயரும் வரிசை எண்ணும் குறிப்பிடப்பட வேண்டும். அத்துடன், அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டை மற்றும் அஞ்சல் உறை இணைக்கப்பட வேண்டும்.

* விண்ணப்பிக்க விரும்புவோர் 25.11.2025 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி – 620006.

Read more: இந்த 2 ரத்த வகை கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

English Summary

Salary up to Rs.50,000.. No exam.. Job in Hindu Religious Charities Department..!! Apply immediately..

Next Post

ஆதார் பிறந்த தேதி அல்லது குடியுரிமைக்கான சான்றா? மத்திய அரசு விளக்கம்!

Wed Oct 29 , 2025
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய […]
e Aadhaar App Launch

You May Like