fbpx

அதிர்ச்சி ரிப்போர்ட்…! 2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளது…! தேசிய நில அதிர்வு மையம் தகவல்…!

2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வட இந்தியாவிலும் நேபாளத்திலும் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளிலும் நடப்பாண்டிலும் டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளபடி இந்த பகுதிகளில் ஏற்பட்ட பூகம்ப நிகழ்வுகளின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

2020-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 42. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை. 2021-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை.

2022-ம் ஆண்டில் 3.0 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 20, 5.0 முதல் 5.9 வரை 3 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் 1 நில நடுக்கம் பதிவானது.

2023-ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரையிலான நில அதிர்வுகள் 97. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 21-ம், 5.0 முதல் 5.9 வரை 4 நிலநடுக்கங்களும், 6.0 முதல் 6.9 வரையில் 2 நில நடுக்கங்களும் பதிவாயின.இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

Vignesh

Next Post

எனது முழு வாழ்க்கைக்கும் ஐபிஎல் தான் எல்லாமே!… க்ளென் மேக்ஸ்வெல் சுவாரஸ்ய பதில்!

Thu Dec 7 , 2023
தன்னால் நடக்க முடியாத வரைஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் பெரிய அளவிலான பங்களிப்பை க்ளென் மேக்ஸ்வெல் வழங்கியிருந்தார். உலகக்கோப்பை தொடரில் கால்வலியால் அவதிப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 தொடரில் மீண்டும் ஒரு […]

You May Like