இந்த ஐந்து விஷயங்களைச் செய்தால் போதும்.. வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு சர்ருனு கரையும்..!

fat

இன்றைய வேகமான வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. குறிப்பாக, தொப்பை கொழுப்பு பலருக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு குவிவதால் உடல் இயக்கம் குறையும், தன்னம்பிக்கை பாதிக்கப்படும். இதனால் இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளும் உருவாகும் அபாயம் அதிகம்.


ஆனால் இதை குறைக்க விலையுயர்ந்த ஜிம் பயிற்சிகள் அல்லது கடுமையான டயட் அவசியமில்லை. சில எளிய வாழ்க்கை பழக்கங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க பெரிய உதவியாக இருக்கும். உதாரணமாக, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது, இரவு உணவை குறைவாகவும் சீக்கிரம் எடுத்துக் கொள்வது, நீர்பானங்களை அதிகரிப்பது, மற்றும் உறக்க நேரத்தை சரியாகப் பின்பற்றுவது ஆகியவை முக்கியம். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை பானங்கள்: நம் அன்றாட வாழ்க்கையில் பழச்சாறுகள், சோடாக்கள், தேநீர், காபி போன்ற பானங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஆனால் அவற்றில் உள்ள அதிக சர்க்கரை உடலில் கொழுப்பாக மாறி, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குவிய வழிவகுக்கிறது. இது தான் தொப்பை கொழுப்புக்கான முக்கிய காரணிகளில் ஒன்று.

இந்த பிரச்சனையைத் தவிர்க்க, இயற்கையான பானங்களைத் தேர்வு செய்வது மிகச் சிறந்த தீர்வாகும். வீட்டிலேயே பழச்சாறுகளை சர்க்கரை இல்லாமல் தயாரித்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. அதோடு, எலுமிச்சை, புதினா இலைகள், வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்து தண்ணீரை டீடாக்ஸ் வாட்டராக மாற்றிக் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மெட்டாபாலிசத்தை தூண்டும்.

மேலும், தேங்காய் தண்ணீர் மற்றும் மோர் போன்ற இயற்கை பானங்கள் உடலை குளிர்விக்கும் மட்டுமல்ல, தேவையான மினரல்களையும் வழங்கி கொழுப்பு குறைப்பிலும் உதவுகின்றன. செயற்கை பானங்களை விட்டு இயற்கை பானங்களைத் தேர்வு செய்வது உடல்நலனுக்கும் அழகுக்கும் இரட்டிப்பு பலன் தரும் நல்ல பழக்கமாகும்.

மைதா உணவுகளை தவிர்த்தல்: சுவையாக இருக்கும் பல பேக்கரி உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பலர் உணர்ந்திருக்கமாட்டார்கள். பரோட்டா, பன், பிஸ்கட், கேக், சமோசா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மைதா (Refined Flour) செரிமான மண்டலத்தைக் கெடுத்து, உடலில் கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, வயிற்று வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக மைதா உணவுகளைத் தவிர்த்து, கோதுமை மாவு, ராகி, பருப்பு, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை (Whole Grains) உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் பசியைத் தடுக்க உதவுகிறது. இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற அன்றாட உணவுகளை தயாரிக்கும் போது முழு தானிய மாவைப் பயன்படுத்துவது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை கட்டுப்பாட்டிலும் உதவியாக இருக்கும்.

பொறித்த உணவுகளை தவிர்த்தல்: வறுத்த உணவுகளில் கலோரிகளும் கெட்ட கொழுப்புகளும் அதிகம். அவை சுவையாக இருந்தாலும், பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், வடை, பூரி போன்றவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். இவற்றை அதிகமாக சாப்பிடுவது உடலில் கொழுப்பு படிந்து, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். முடிந்தவரை வறுத்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த, கிரில் செய்யப்பட்ட அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள். காய்கறி சாலடுகள், சுண்டல், பழங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிடுவது நல்லது.

பாக்கெட் உணவுகளை தவிர்த்தல்: பாக்கெட் உணவுகள் மற்றும் துரித உணவுகளில் உப்பு, கொழுப்பு மற்றும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றுக்கு பதிலாக, வீட்டில் சமைத்த புதிய, சத்தான உணவை உண்ணுங்கள். கோழி, மீன், முட்டை, காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது நல்லது.

உடற்பயிற்சி: தினமும் 30-45 நிமிடங்கள் வேகமாக நடப்பது கூட தொப்பையைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நடப்பது கலோரிகளையும் கொழுப்பையும் எரிக்கிறது. லிஃப்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறி அருகிலுள்ள இடங்களுக்கு நடப்பது போன்ற சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.

Read more: இந்த நோய்கள் இருந்தால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடாதீர்கள்..!! ஏன் தெரியுமா..?

English Summary

Just do these five things and the fat around your stomach will melt away!

Next Post

ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்.. இபிஎஸ் சொன்ன பதில் என்ன?

Thu Oct 30 , 2025
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.. ஆனால் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் இந்த கூட்டணி பலவீனமான கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.. ஆனால் அதிமுக […]
ops sengottaiyan 1

You May Like