சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு நகைச்சுவையான வீடியோவில், பள்ளிக்கு செல்லாமல் தவிர்க்க ஒரு சிறுவன் எடுத்த அதிகபட்ச முயற்சி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சிறுவன் கட்டிலிலேயே படுத்து கொண்டு, பள்ளிக்கு போக மறுத்து பிடிவாதமாக படுக்கையை பற்றிக் கொண்டு கிடக்கிறான். குடும்பத்தினர் பலமுறை அவனை எழுப்ப முயன்றாலும், சிறுவன் எப்படியும் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான்.
ஆனால் கோபப்படாமல், குடும்பத்தினர் ஒரு புதுமையான தீர்வை கண்டுபிடித்தனர்.. ஆம்.. சிறுவனை எழுப்ப முடியாததால், அவன் படுத்திருக்கும் கட்டிலுடன் சேர்த்து தூக்கி, பள்ளிக்குச் சென்றனர்!
சிறுவன் போர்வையில் சுருண்டபடி, கட்டிலுடன் தெருவில் தூக்கிச் செல்லப்படுகிறான். அருகில் நின்றவர்கள் அதை பார்த்து சிரிக்கிறார்கள். பள்ளி வாசலுக்கு வந்த பிறகும் சிறுவன் கட்டிலில் இருந்து எழுந்திருக்கவில்லை; மற்ற மாணவர்கள் சீராக பள்ளிக்குள் செல்வதை பார்த்தும் அவன் உறுதியாக படுக்கையில் சாய்ந்தபடி இருந்தான். கட்டிலை கீழே சாய்த்தும் கூட அவர் கீழே விழாமல் இறுக்கமாக கட்டிலை பிடித்துக் கொண்டான்..
வீடியோவின் நீளமான பதிப்பில், ஆசிரியர் கூட வந்து சிறுவனை எழுப்ப முயற்சிக்கிறார்; ஆனால் அப்போது எழுந்துவிட மறுக்கிறான். சமூக வலைதள பயனர்கள் இந்த காட்சியை பார்த்து பெரிதும் ரசித்துள்ளனர். ஒருவர் “பழைய பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது” என்று கருத்து தெரிவித்தார்..
இந்த வீடியோ பலரிடமும் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டெடுத்ததுடன், “பள்ளிக்கு போக வேண்டாமென கூறிய காரணங்கள் குறித்து நகைச்சுவையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : OTP இல்லை, அலர்ட் இல்லை; ஆனா ரூ.90,900 காலி.. சில நிமிடங்களில் பணத்தை இழந்த பெங்களூரு பெண்.. என்ன நடந்தது?



