யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 7-ம் தேதி கடைசி நாள்…! மிஸ் பண்ணிடாதீங்க

UGC case 11zon

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெற உள்ளது. அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக நவம்பர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்களில் நவம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பாடத்திட்டம், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நெல்லை, தென்காசி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் கனிமக் கொள்ளை...! அன்புமணி எடுத்த சபதம்...!

Mon Nov 3 , 2025
கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய […]
13507948 anbumani 1

You May Like