அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.. மகன், மைத்துனன் தலையீடு இருக்கு.. இபிஎஸ் மீது செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு..

eps sengottaiyan nn

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்…


எனினும் செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்..

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரச்சனைகளை பார்க்கும் திமுகவில் மட்டும் அல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.. இது நாடறிந்த உண்மை.. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கீழ் அதிமுகவில் மகன், மைத்துனன், மாப்பிள்ளையின் தலையீடு உள்ளது..

அரசியலை பொறுத்த வரை, இந்த இயக்கத்திற்காக புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மாக காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும்.. என்ற நோக்கத்தில் தான் என் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : ஷாக்.. இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

இனி ரூ.500 செலவில் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியலாம்..!! யாருக்கு அவசியம்..? சென்னையில் அதிநவீன வசதி..!!

Mon Nov 3 , 2025
தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால், இளம் வயதினரிடையே திடீர் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதும், நடனமாடும்போதும், நடைபயிற்சியின்போதும் திடீரென ஏற்படும் மாரடைப்பு சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வருகின்றன. எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத இளைஞர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த அபாயகரமான காலகட்டத்தில், இருதய அடைப்புகளை […]
Heart 2025

You May Like