தேசிய சிறுதொழில் கழகத்தில் வேலை.. ரூ. 2 லட்சத்துக்கு மேல் சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

job 2

தேசிய சிறுதொழில் கழகத்தில் (NSIC) டெபியூட்டி மேனேஜர், சீப் மேனேஜர், மேனேஜர் உள்ளிட்ட பல பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 70 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.


பணியிட விவரம்:

  • ஜெனரல் மேனேஜர் – 4
  • டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் – 14
  • சீப் மேனேஜர் – 12
  • மேனேஜர் – 8
  • டெபியூட்டி மேனேஜர் – 32

சம்பளம்:

  • ஜெனரல் மேனேஜர் : ரூ.80,000 – ரூ.2,20,000
  • டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் : ரூ.70,000 – ரூ.2,00,000
  • சீப் மேனேஜர் : ரூ.60,000 – ரூ.1,80,000
  • மேனேஜர் : ரூ.50,000 – ரூ.1,60,000
  • டெபியூட்டி மேனேஜர் : ரூ.40,000 – ரூ.1,40,000

வயது வரம்பு: ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரையும், டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 41 வயது வரையும் இருக்கலாம். சீப் மேனேஜர் பதவிக்கு 38 வயது வரையும், மேனேஜர் பதவிக்கு 34 வயது வரையும் இருக்கலாம்.

கல்வித்தகுதி:

ஜெனரல் மேனேஜர்: டிகிரியுடன் எம்பிஏ அல்லது சிஏ / சிஎம்ஏ (CA / CMA) முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

டெபியூட்டி ஜெனரல் மேனேஜர்: B.E. / B.Tech / CA / CMA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 12 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சீப் மேனேஜர்: B.E. / B.Tech, CS, CA / CMA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 9 ஆண்டுகள் அனுபவம் தேவை.

மேனேஜர்: CA / CMA அல்லது B.E. / B.Tech முடித்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

டெபியூட்டி மேனேஜர்: MBA, தொழில் மேம்பாடு, சட்டம், CS / CA / CMA ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

* விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் முதலில் தேர்வு குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

* அவர்களில் சிறந்தவர்கள் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.

* நேர்காணல் மூலமாகவே இறுதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் தங்களின் விவரங்களை அளித்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும்.

விண்ணபிக்க கடைசி நாள் 16.11.2025.

Read more: ஓய்வூதியதார்களே அலர்ட்.. உடனடியாக இதை செய்யுங்கள்..! இல்லை எனில் ஓய்வூதியம் வராது..!

English Summary

Job at National Small Industries Corporation.. Rs. Salary over 2 lakhs.. Apply immediately..!

Next Post

கார் வாங்க போறீங்களா..? குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் மலிவான கார்கள்..! லிஸ்ட் இதோ..

Mon Nov 3 , 2025
Are you going to buy a car..? Cheap cars that give high mileage at a low price..!
kia car

You May Like