இன்ஸ்டா காதலால் வந்த வினை..!! 42 வயது பெண்ணுடன் திருமணம்..!! 3ஆம் நாளில் வந்த முதல் கணவர்..!! 90ஸ் மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!!

marriage register

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ஸ்ரீதர், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வீட்டில் வரன் தேடப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக மகாஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் காதலாக மலர்ந்தது.


தன்னை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு 30 வயது என்றும் மகாஸ்ரீ ஸ்ரீதரிடம் கூறியுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மகாஸ்ரீ, ஸ்ரீதரிடம் வலியுறுத்தியுள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் ஸ்ரீதரின் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த நவம்பர் 30ஆம் தேதி நாமக்கல் பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீதர் – மகாஸ்ரீ திருமணம் வெகு சில உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டனர்.

திருமணம் முடிந்து 3-வது நாளான நேற்று, ஸ்ரீதர் வீட்டிற்கு கார் ஒன்றில் வந்த சிலர், திடீரென மகாஸ்ரீயை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரித்தபோதுதான் உண்மை வெளியானது. மகாஸ்ரீக்கு 30 வயது இல்லை என்றும், அவருக்கு 42 வயது என்றும் தெரியவந்தது. மேலும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி ஸ்ரீதரை நிலைகுலையச் செய்தது.

மகாஸ்ரீயைத் தாக்கியவர்கள் அவரது முதல் கணவர் மற்றும் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளான ஸ்ரீதர் மற்றும் அவரது வீட்டார், மகாஸ்ரீயை ஏற்க மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான கைகலப்பு மற்றும் பிரச்சனைக்குப் பிறகு, மகாஸ்ரீக்கு அணிவித்த 5 சவரன் தாலிக்கொடியை திரும்பப் பெற்றுவிட்டனர். மகாஸ்ரீயின் மகன் மற்றும் மகள் திருநெல்வேலியில் உள்ள அவரது பெற்றோரின் பராமரிப்பில் வசித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்து 3 நாளில் ஸ்ரீதர் வாழ்வில் அரங்கேறிய இந்தச் சோக சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ப.வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : நரை முடியை பிடுங்கினால் இன்னும் அதிகமான வெள்ளை முடி வருமா..? உண்மை என்ன..?

CHELLA

Next Post

வரலாறு காணாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு..! 1 டாலரின் மதிப்பு ரூ.90..! இதற்கு என்ன காரணம்?

Wed Dec 3 , 2025
இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ரூ.90 ஆக சரிந்தது.. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது.. அமெரிக்காவுடனான ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து, முதல் முறையாக முக்கிய […]
rupees falls

You May Like