“ஒவ்வொரு நாளும் வலிமிக்க நாளாகவே இருக்கிறது..” ஏர் இந்தியா விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் வேதனை..!

Air India crash 2

யுனைடெட் கிங்டம் நாட்டின் லெஸ்டரில் வசிக்கும் 40 வயதான விஸ்வாஸ் குமார் ரமேஷ், கடந்த ஜூன் 12 அன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர்.


அந்த துயரமான சம்பவத்துக்குப் பல மாதங்களுக்குப் பிறகு, ரமேஷ் தான் உயிருடன் இருப்பதை ஒரு மேஜிக் என்றும், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரோடு இருக்கும் அதிர்ஷ்டசாலி நான் தான்” என்றும் கூறுகிறார். எனினும், அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

BBC-க்கு அளித்த பேட்டியில் ரமேஷ் “எனக்கு இப்போது எதுவும் இல்லை. என் சகோதரர் அஜய் அந்த விமானத்தில் இருந்தார்; அவர் உயிரிழந்துவிட்டார். அவர் எனது முதுகெலும்பு போன்றவர். கடந்த சில ஆண்டுகளாக எப்போதும் என்னை ஆதரித்தார். இப்போது நான் முற்றிலும் தனியாகிவிட்டேன். நான் ஒரே உயிர் பிழைத்தவன். இன்னும் நம்ப முடியவில்லை. இது ஒரு அதிசயம்,” என்று தெரிவித்தார்..

மேலும், “நான் இப்போது என் அறையில் இருக்க விரும்புகிறேன். என் மனைவியுடனோ, நான்கு வயது மகனுடனோ பேச விருப்பமில்லை. யாரிடமும் பேச விருப்பமில்லை. வீட்டில் அமைதியாக தனியாக இருக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.

“ஒவ்வொரு இரவும் நினைத்துக்கொண்டு தவிக்கிறேன்”

ஜூன் 12 அன்று நடந்ததை நினைவில் கொள்ளவே முடியவில்லை என்று அவர் கூறினார். “ஒவ்வொரு நாளும் எனக்கும் என் குடும்பத்திற்கும் வலிமிக்க நாளாகவே இருக்கிறது. தற்போது யாருடனும் பேசவில்லை. மன அழுத்தத்தால் அவதிப்படுகிறேன்,” என்று ரமேஷ் கூறினார்.

தன்னால் தற்போது நன்றாக நடக்க முடியவில்லை என்று கூறிய அவர் “என் காலை, தோள், முழங்கை, முதுகு.. இவை அனைத்திலும் தொடர்ந்து வலி உள்ளது. என் மனைவியின் உதவியுடன் தான் நான் நகர முடிகிறது,” என்று கூறினார்.

மேலும் “உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என் தாயும் நான்கு மாதங்களாக கதவின் முன் தினமும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவர் யாருடனும் பேசுவதில்லை. நான் இரவு முழுவதும் நினைத்துக்கொண்டு வலிக்கிறேன். ஒவ்வொரு நாளும் எங்களுக்கெல்லாம் வலியானது.” என்று தெரிவித்தார்..

கொடிய ஏர் இந்தியா விபத்து

ஜூன் 12 அன்று அஹமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். விமான விபத்து விசாரணை குழுவின் (AAIB) ஆரம்ப அறிக்கையில், விமானம் பறப்பதற்குப் பிறகு ஒரே ஒரு விநாடி இடைவெளியில் இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் காக்பிட் பகுதியில் குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விஸ்வாஸ் குமார் ரமேஷ் அவர்களுக்கு ரூ. 25.09 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது:

“இறுதி அறிக்கை வருவதற்காக நாங்களும் காத்திருக்கிறோம். அதிலிருந்து எதைக் கற்றுக்கொள்ள முடியுமோ அதை கண்டிப்பாக செய்வோம்,” என்று கூறினார்…

Read More : 14 பேர் உடல் நசுங்கி பலி.. பலர் காயம்.. 17 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து!

RUPA

Next Post

தமிழ்நாட்டில் நாளை முதல் S.I.R. தொடக்கம்.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

Mon Nov 3 , 2025
2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. எனினும் SIR ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இது வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் சதிச்செயல் என்றும் திமுக தொடர்ந்து கூறி வருகிறது.. அந்த வகையில் திமுக தலைவரும் […]
supreme court stalin

You May Like