2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளன. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது சமூக வலைதள பதிவில் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், உலக வரலாற்றில் இடம்பெற்ற Reformasi (இந்தோனேசியா), Aragalaya (இலங்கை), Arab Spring போன்ற மக்கள் எழுச்சிகளுடன் தமிழக தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டுள்ளார். அந்த நாடுகளில் மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழகத்தில் மக்கள் ஜனநாயக முறையில் வாக்குச்சீட்டின் மூலம் “அமைதி புரட்சி” ஒன்றை நிகழ்த்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனா அந்தோலன் III போன்ற நிகழ்வுகள் எப்படி அரசியல் அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினவோ, அதேபோல் தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவிய திமுக – அதிமுக அரசியல் ஆதிக்கத்திற்கு மாற்றாக புதிய சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே சில முரண்பாடுகள் இருந்ததையும், சில காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது தவெக பல்வேறு இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரஸ் – தவெக கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Read more: விஜய் வீட்டுக்கு முன் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. உச்சக்கட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!



