இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மூத்த குடிமக்கள் முதல் சாதாரண முதலீட்டாளர்கள் வரை பலரையும் கவரும் ஒரு சிறப்பான திட்டம் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – POMIS) ஆகும். இந்த குறைந்த ரிஸ்க் கொண்ட, உத்தரவாதமான வருமானத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ. 10,000 வரை மிக எளிதாக சம்பாதிக்கலாம்.
முதலீட்டு விவரங்கள் மற்றும் வட்டி விகிதம் :
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் மத்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானது. தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 சதவீதம் (மாறுதலுக்கு உட்பட்டது) ஆகும். குறைந்தபட்சம் ரூ. 100 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். அதன் பிறகு ரூ. 1,000 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் தனி நபர் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணவன், மனைவி இருவரும் இணைந்து அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய தேதியில் இருந்து ஒரு மாதம் முடிந்ததும் வட்டி வழங்கப்படுகிறது. இது முதிர்வு காலம் வரை தொடர்ந்து கிடைக்கும். இத்திட்டத்தின் வருமானத்திற்கு வரி உண்டு என்பதால், முதலீட்டை திட்டமிடும்போது இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாத வருமானம் எவ்வளவு..?
இந்தத் திட்டத்தில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் முதலீடு செய்யும்போது, ஆண்டுக்கு 7.40 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 1,11,000 வருமானமாக ஈட்டலாம். இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ. 9,250 நிலையான வருமானமாகப் பெற முடியும். முதலீடு செய்வதில் ரிஸ்க் இல்லை, அதிகப் பாதுகாப்பு, மற்றும் நாமினி வசதி இருப்பதால், இது மாதச் செலவுகளைச் சமாளிக்க மிகவும் ஏற்ற திட்டமாக கருதப்படுகிறது.
Read More : தமிழக விவசாயிகளே..!! இனி உங்களுக்கு ரூ.2,000 கிடைக்காது..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



