Flash : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?

jewels nn

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ. 11,250க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து தங்கம் விலை ரூ.90,000-க்கு விற்பனையாகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.164க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,64,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : தங்க நகை அடகு வைக்கும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்துடாதீங்க.. நகையே கைவிட்டு போய்டும்..!

RUPA

Next Post

ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை.. ஜாக்பாட் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க..!

Thu Nov 6 , 2025
The Competition Commission of India (CCI) has issued a notification for the recruitment of young professionals on contract basis.
job

You May Like