ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் வட்டி மட்டும் ரூ.32,000 கிடைக்கும்.. பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

AA1IQqbw

பெண்களின் நிதி சுயமரியாதையும், சேமிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்க மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானதும், மிகுந்த வரவேற்பைப் பெற்றதுமானது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate – MSSC) திட்டம் ஆகும்.


2023ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டம், பெண்கள் தங்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். திருமணமான ஆண்கள் தங்களின் மனைவியின் பெயரில், இளம் வயதினர்கள் தங்களின் தாயின் பெயரில் கூட கணக்கு தொடங்கலாம்.

இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பு அரசு உறுதி வழங்கும் பாதுகாப்பும், 7.5% எனும் உயர்ந்த வட்டியும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சம் ₹2,00,000 வரை முதலீடு செய்யலாம். இரண்டு ஆண்டுகள் காலத்திற்குப் பிறகு திட்டம் முதிர்ச்சி அடையும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு வருடம் கழித்து 40% தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது. இதனால், அவசரநேரத் தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டாலும் சிக்கலின்றி பெறலாம்.

மிகவும் முக்கியமாக, ₹2 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகள் முடிவில் ₹2,32,044 பெறலாம். அதாவது, ₹32,044 வட்டி வருமானம். இது வங்கிக் கணக்குகளில் கிடைக்கும் சாதாரண வட்டியை விட அதிகம். இந்தத் திட்டத்தின் மற்றொரு நன்மை, அது அரசுத் திட்டம் என்பதால் முழுமையான நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு வழங்குகிறது.

Read more: இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிந்தால் போதும்.. தீஞ்சுபோன, அடிபிடித்த பாத்திரங்களை கூட ஈஸியா சுத்தம் செய்யலாம்..!!

English Summary

If you deposit Rs. 2 lakhs, you will get Rs. 32,000 in interest only.. Super savings plan for women..!!

Next Post

“அந்த ஃபைல்களை எரிச்சுட்டோம்.. பாவம் இபிஎஸ் ஆட்கள் கோடநாட்டில் போய் தேடியிருக்காங்க..” டிடிவி தினகரன் பகீர் தகவல்..

Thu Nov 6 , 2025
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]
kodanadu ttv eps

You May Like