பின்தங்கிய திமுக.. களையிழந்த அண்ணா அறிவாலயம்.. தேம்பி தேம்பி அழுத தொண்டர்..!! வீடியோ வைரல்..

dmk cry

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே ஆச்சரியமான திருப்பங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த நிலையில், சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தற்போது அகற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தவெகவுக்கு ஆதரவாக வரும் நிலையில் திமுக தொண்டர் ஒருவர் மனமுடைந்த அழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவில் தவெக பக்கம் திரும்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, கல்வி மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு நடந்த பிரச்சாரம் வாக்காளர்களை ஈர்த்ததாக மதிப்பிடப்படுகிறது.

முக்கிய தொகுதிகளான பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகள் வரை நிலவரங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், ஆரம்பகட்ட முன்னிலைகள் உறுதியாகும் பட்சத்தில், 2026 தேர்தல் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் முக்கிய தருணமாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read more: திமுகவால் வருத்தம்.. தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ்..? தேர்தல் முடிவுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பரபர ட்வீட்..!

English Summary

Early Trends Put Vijay’s TVK Ahead, Video Of DMK Worker Crying Goes Viral After Removal Of Tents At Chennai HQ

Next Post

"இது நம்ம சர்க்கார்" 1 கோடி வாக்குகளைக் கடந்து தவெக புதிய சாதனை..! சொல்லி அடித்த விஜய்..

Mon May 4 , 2026
"This is our government" crosses 1 crore votes, setting a new record..! Vijay says..
24 67208f1b7fd84

You May Like