தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் கமல்ஹாசன் வலம் வருகிறார்.. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவை உலக சினிமா அளவுக்கு தரம் உயர்த்திய வெகு சில கலைஞர்களில் கமல்ஹாசனும் ஒருவர். 5 வயதில் நடிக்க தொடங்கிய அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை..
1959-ல் வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், தனது சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்றார். அதன் பின் அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், நாயகன், தேவர்மகன், இந்தியன், ஹேய் ராம், தசாவதாரம் போன்ற படங்களால் இந்திய சினிமாவின் பல்வேறு பரிமாணங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
வெறும் நடிகர் என்று மட்டும் அவரை சுருக்கிவிட முடியாது.. இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடனக் கலைஞர் என பல துறைகளில் தன்னை நிரூபித்த கமல்ஹாசன், தனது தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் பல சிறந்த படங்களை வழங்கியுள்ளார்.
4 தேசிய விருதுகள், பத்தொன்பது பிலிம் ஃபேர் விருதுகள், மேலும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் போன்ற அரச விருதுகளைப் பெற்றுள்ள அவர், 2018-ல் மக்கல் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் மாறினார்.. தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமைகளை புகுத்திய கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..
நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து தற்போது பார்க்கலாம்.. சினிமா, தொலைக்காட்சி மற்றும் பல வணிக முயற்சிகளால் நாட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவராக உள்ளார்.. தற்போது அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 450 கோடி என மதிப்பிடப்படுகிறது. இதனால் அவர் இந்தியாவின் மிகச் செல்வந்த திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார்.
கமல்ஹாசனுக்கு சென்னை அழ்வார்பேட்டையில் 60 வருட பழமையான பங்களா உள்ளது.. மேலும் போட் கிளப் ரோடு பகுதியில் ரூ.92 கோடி மதிப்புள்ள ஸ்கை-வில்லா ஒன்று உள்ளது..
இவை தவிர சென்னை, மங்களூரு மற்றும் பெங்களூருவில் அவருக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளன.. மேலும் கமல்ஹாசனுக்கு லண்டனில் சுமார் ரூ. 2.6 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது.. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த லண்டன் வீடு அவர் முதலில் ஒரு திரைப்படப் படப்பிடிப்பு இடமாக நினைத்து வாங்கியதாக கூறப்படுகிறது!
ஆடம்பர வீடுகள் மட்டுமின்றி விலை உயர்ந்த கார்களையும் கமல்ஹாசன் வைத்திருக்கிறார்.. அவரிடம் ரூ.2.82 கோடி மதிப்பில் Lexus LX 570, ரூ. ரூ.1.35 கோடி மதிப்பில் BMW 730 LD கார்களும் உள்ளது.. மேலும் கமல்ஹாசனிடம் ஆடம்பர கடிகாரங்களும் உள்ளன.. ரூ.42 லட்சம் மதிப்புள்ள Corum Golden Bridge Classic கடிகாரம், ரூ. 47 லட்சம் மதிப்புள்ள Rolex Day-Date கடிகாரங்கள் உள்ளன.. நடிகர் சூர்யாவிற்கு பரிசாக வழங்கியதன் மூலம் இது இணையத்தில் வைரலானது..



