‘தை பிறந்தால் வழி பிறக்கும்..’ அதிமுக கூட்டணியில் விஜய்..? அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்..!

12166266 rbudhayakumar 1

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.


மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பாஜக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் விஜயுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை ஆர்பி உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார்.

எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை இபிஎஸ் அமைப்பார் என தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஆர்பி உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Read more: அரிய சக்திவாய்ந்த யோகம்… இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீரென சொத்து சேரும்..! உங்க ராசி இருக்கா..?

English Summary

If a child is born, a way will be born.. Vijay in the AIADMK alliance..? RB Udayakumar says..!

Next Post

'துர்கா தேவியை பற்றிய வந்தே மாதரம் பத்திகள் 1937-ல் நேருவால் நீக்கப்பட்டன': பாஜக குற்றச்சாட்டு!

Fri Nov 7 , 2025
இந்தியா தேசியப் பாடலான “வந்தே மாதரம்” 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேரு தன்னிச்சையாக துர்கா தேவியைப் புகழ்ந்த பாகங்களை நீக்கி, பாடலின் சுருக்கப்பட்ட வடிவத்தை வெளியிட்டார் என்பது தான் பாஜகவின் குற்றச்சாட்டு.. பாஜக தேசியப் பேச்சாளர் சி.ஆர். கேசவன், தனது எக்ஸ் பக்கத்தில் “ 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் செய்தது “வரலாற்று பாவமும் […]
nehru 2

You May Like