தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இத்துடன் முதல்வர் விஜய் 2 […]

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. பரந்தூர் திட்டத்திற்காக ஏறத்தாழ 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ள சூழலில், அந்த நிலங்களை அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பினர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் […]

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]