நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. சரிவுக்கு பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ..!

gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.11,300க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.164க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,64,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : பழைய வீடியோக்களும் இனி 4K தரத்தில்..!! AI உதவியுடன் Super Resolution வசதி..!! அசத்தலான அப்டேட்டுடன் வருகிறது யூடியூப்..!!

RUPA

Next Post

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்; பின்னணியில் அல்-கொய்தா தொடர்பான பயங்கரவாதிகள் குழு? அதிர்ச்சி தகவல்!

Sat Nov 8 , 2025
மாலி நாட்டில் துப்பாக்கி முனையில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இதை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கொப்ரி (Kobri) என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்தது. கடத்தப்பட்டவர்கள் மின்சார இணைப்பு (electrification) திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்தலுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்திய பணியாளர்கள் மாலி தலைநகரமான பாமாகோ (Bamako)க்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]
mali

You May Like