மத்திய அரசின் ஆயுஷ் (AYUSH) துறையின் கீழ் செயல்படும் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (Central Council for Research in Homoeopathy) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, குரூப் A, B, C பிரிவுகளுக்குட்பட்ட மொத்தம் 90 காலிப்பணியிடங்கள் உள்ளன.
பணியிட விவரம்:
- ஆய்வு அதிகாரி – 14
- உதவி ஆய்வு அதிகாரி – 1
- இளநிலை நூலகர் – 1
- பார்மசிஸ்ட் – 3
- எக்ரே டெக்னீஷியன் – 1
- லோவர் டிவிசன் கிளார்க் – 27
- டிரைவர் – 2
- நர்ஸ் – 9
- மெடிக்கல் லேப் டெக்னாலாஜிஸ்ட் – 28
- ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலாஜிஸ்ட் – 1
- ஜூனியர் ஸ்னோகிராப்பர் – 3
வயது வரம்பு:
* ஆய்வு அதிகாரி (Research Officer) பதவிக்கு அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.
* உதவி ஆய்வு அதிகாரி (Assistant Research Officer) பதவிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* நூலகர், எக்ரே டெக்னீஷியன், டிரைவர் பதவிக்கு 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பார்மசிஸ்ட் (Pharmacist) பதவிக்கு 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* கிளார்க் மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் (Clerk & Junior Stenographer) பதவிக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* நர்ஸ் (Nurse)க்கு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* ஜூனியர் ஸ்டெனோகிராபர் (Junior Stenographer) பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.
* ஜூனியர் பணியிடங்கள் (Junior Posts) 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
ஆய்வு அதிகாரி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நூலகர்: பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் தேவை.
பார்மசிஸ்ட் / எக்ஸ்ரே டெக்னீஷியன்: டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கிளார்க்: 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டைப்பிங் திறன் அவசியம்.
டிரைவர்: பள்ளி கல்வியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
நர்ஸ்: நர்சிங் டிகிரி மற்றும் பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.
மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்: இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் பதவிகள்: தொடர்புடைய துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் ஸ்டெனோகிராபர்: 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஸ்டெனோகிராஃபி சான்றிதழ் அவசியம்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் அதிகபடியாக ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறும். ஸ்னோகிராப்பர், கிளார்க் பதவிகளுக்கு திறன் தேர்வு இடம்பெறும்.
எப்படி விண்ணப்பிப்பது? மத்திய அரசு கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ccrhindia.ayush.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.11.2025.
Read more: காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை.. கணவர் வீட்டில் நடந்தது என்ன..? திடுக்கிட்ட குமரி..



