அணுஆயுத சோதனை நடத்துமாறு புடின் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை!. கிரெம்ளின் மாளிகை பதில்!

putin trump

அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதுபோன்ற சோதனை நடத்துவதற்கான திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை என்று ரஷ்யா பதிலளித்துள்ளது.


இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அணு ஆயுத சோதனைகள் மீதான நீண்ட கால தடைக்கு ரஷ்யா உறுதிபூண்டுள்ளது. மூன்று தசாப்த கால இடைநிறுத்தத்தை அமெரிக்கா மீறினால், அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம். அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்றைய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு அணுசக்தி சமநிலை என்பது மிக முக்கியமான ஒன்றாகும் என்று டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

அமெரிக்க அணு ஆயுதங்களை பரிசோதிக்க தொடங்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். அவர், ”வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது” என கூறியிருந்தார். தற்போது, அணு ஆயுத சோனையை மீண்டும் தொடங்குமாறு டிரம்பின் உத்தரவுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.

Readmore: தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் திருத்தம்…! 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது…!

KOKILA

Next Post

ஆதார் தொலைந்துவிட்டதா..? 12 இலக்க எண்ணை மறந்துவிட்டீர்களா..? ஆன்லைனில் ஈசியாக மீட்டெடுப்பது எப்படி..?

Mon Nov 10 , 2025
இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசுப் பலன்கள் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை கட்டாயம் தேவை. பல சமயங்களில் இந்த முக்கியமான அட்டை தொலைந்து போனால் அல்லது அதன் எண்ணை மறந்துவிட்டால் மக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு […]
Aadhaar 2025 3 e1748442059688

You May Like