ஈக்வடார் சிறைச்சாலையில் பயங்கர கலவரம்!. கொத்துக்கொத்தாக பலியான கைதிகள்!. 31 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி!.

ecuador prison riot

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.


ஈக்வடார் நாட்டின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த ஞாற்றுக்கிழமை இங்கு திடீரென இரண்டு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இந்த மோதல் கலவரமாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.

Readmore: திருவண்ணாமலையில் இப்படி ஒரு கோயிலா..? அமாவாசை நாளில் கண்டிப்பா போயிட்டு வாங்க..!! மாற்றம் நிச்சயம் நிகழும்..!!

KOKILA

Next Post

சாப்பிட்ட உடனே மோசமான இந்த 5 விஷயங்களை மட்டும் பண்ணிடாதீங்க..!! ஆபத்து வருவது கன்ஃபார்ம்..!!

Tue Nov 11 , 2025
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உணவு உண்ட பிறகு நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். செரிமான அமைப்பு மிகவும் நாசூக்கானது என்பதால், நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நாளடைவில் ஜீரண சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெகுவாகப் பாதித்துவிடும். அப்படி, நாம் சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தண்ணீரும் தேநீரும் குடிக்க வேண்டாம் […]
Food 2025

You May Like