மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் (Population Research Centre) பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையம், உதவிப் பேராசிரியர் முதல் எழுத்தர் வரை மொத்தம் 6 வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
பணியிட விவரம்:
உதவிப் பேராசிரியர் (Assistant Professor) – 1 இடம்
* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / பொருளாதாரம் பிரிவில் முதுகலைப் பட்டம் (UGC விதிகளின்படி)
* சம்பளம்: ரூ.57,700 – ரூ.1,82,400 வரை
ஆராய்ச்சி புலனாய்வாளர் (Research Investigator) – 1 இடம்
* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / சமூகப் பணி பிரிவில் முதுகலைப் பட்டம்
* சம்பளம்: ரூ.44,570 – ரூ.1,27,480 வரை
புலன் புலனாய்வாளர் (Field Investigator) – 2 இடங்கள்
* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / பொருளாதாரம் பிரிவில் முதுகலைப் பட்டம்
* சம்பளம்: ரூ.32,670 – ரூ.1,01,970 வரை
எழுத்தர் / தட்டச்சர் (LDC / Typist) – 1 இடம்
* கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Degree)
* சம்பளம்: ரூ.37,747 வரை
ஆராய்ச்சி உதவியாளர் – II (Research Fellow – II) – 1 இடம்
* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / சமூகவியல் பிரிவில் முதுகலைப் பட்டம்
* சம்பளம்: ரூ.25,000 வரை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் 42 வயதுக்கு மேற்படாதவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் குறுகிய பட்டியலிடல் (Short Listing) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்கேற்ப கணினி திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இறுதி நியமனம் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://mohfw.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பதிவாளர், மத்திய நிர்வாக அலுவலகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் – 530003. (The Registrar, Central Administrative Office, Andhra University, Visakhapatnam – 530003.) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் நவம்பர் 25, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: 5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் சம்பாதிக்கலாம்! அசத்தல் திட்டம்..! மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?



