உத்தரப்பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவில் வசித்து வந்த அதன் உரிமையாளர் மொகிந்தர் சிங் மற்றும் அவரது பணியாளர் சுரேந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 19 வருடங்களாக ஏழை குடும்பங்களை சேர்ந்த பல சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களை கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் சிலவற்றை தனியாக வெட்டி, பங்களாவைச் சுற்றியுள்ள கால்வாய்களில் வீசியும், சில உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். சமீபத்தில், கால்வாயில் மிதந்த மண்டை ஓட்டை கண்ட ஒரு பெண், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், சோதனை செய்தபோது, அது பெண்களின் எலும்புக் கூடு என்பதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பங்களாவின் உரிமையாளர் மொகிந்தர் சிங்கை கைது செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், உரிமையாளர் மொகிந்தர் சிங்கும், அவரது வேலைக்காரர் சுரேந்தரும் இணைந்து, நொய்டா பகுதியில் வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் குறித்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இவர், 16 வயதுடைய பெண்களை கொலை செய்த பிறகு, அவர்களது சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதுடன், அந்தப் பெண்களின் சில உடல் உறுப்புகளை அறுத்துச் சாப்பிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கொடூரமான குற்றச் செயலின் ஆழம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, காவல்துறையினர் உரிமையாளர் மொகிந்தர் சிங் மற்றும் பணியாளர் சுரேந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : 40 வயதில் சொந்த வீடு கனவா..? EMI + சேமிப்பு..!! இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!



