முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு..! Z+ல் என்ன இருக்கும்..?

cm vijay 1

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..


முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்..

இந்த நிலையில், முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முதல்வருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் விஜய்க்கும் அதே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.. முதலமைச்சர் பாதுகாப்பு குழுவில் 10-க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்..

இசட் பிளஸ் பிரிவில் முதல்வரின் வாகனத்துடன் குண்டு துளைக்காத 2 அல்லது 3 கார்கள் செல்லும்.. ஒரு நாளைக்கு 36 பேர் கொண்ட பாதுகாப்பு குழு 3 வேளைகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்..

Read More : Flash: நேருக்கு நேர்.. ஆட்சிக்கு வந்த உடனே ஸ்டாலினை சந்திக்கும் விஜய்..! என்ன காரணம்?

RUPA

Next Post

தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த விஜயின் 336 தேர்தல் வாக்குறுதிகள்..! என்னென்ன தெரியுமா..?

Mon May 11 , 2026
Vijay's 336 election promises that made Tamil Nadu look back..! Do you know what they are..?
CM vijay 1 1

You May Like