Breaking : 2 முறை உயர்ந்து ஒரே நாளில் ரூ.2,400 அதிகரித்த தங்கம் விலை.. மீண்டும் 95,000-ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

jewels nn

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. ஆனால் இந்த வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை, நேற்று சரிந்தது…

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. அதன்படி இன்று காலை ரூ.1600 உயர்ந்து ரூ.94,400க்கு விற்பனையானது..

இந்த நிலையில் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. இன்று அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.200 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.100 உயர்ந்து ரூ.11,900க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.800 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

ஆனால் இன்று வெள்ளி விலையும் இன்று 2 முறை அதிரடியாக உயர்ந்துள்ளது… அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.1 உயர்ந்து ரூ.183க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : Flash : தமிழ்நாட்டிலும் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற சம்பவம்.. ரவுடி கருக்கா வினோத் செயலால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு..

RUPA

Next Post

உடலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கை அகற்றும் புளி.. ஆய்வில் வெளிவந்த ஆச்சர்யமான தகவல்..! அதை எப்படி எடுத்துக்கொள்வது..?

Thu Nov 13 , 2025
Tamarind removes microplastics from the body.. Surprising information revealed in the study..! How to take it..?
tamarind juice

You May Like