fbpx

தமிழகம் முழுவதும்… மாற்றுதிறனாளிகளின் எளிதில் பயண்படுத்தும் வகையில் 552 புதிய பேருந்து…!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தரவின்படி ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழகம் 352. கோயம்புத்தூர்-100. மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இனி நீங்களும் ரூ.6,000 நிவாரணத் தொகை பெறலாம்..!! உடனே இதை பண்னுங்க..!!

Mon Dec 18 , 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைத்தார். ரூ.6,000 டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள ரேஷன் கடைக்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ரேஷன் கடைகளில் அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து […]

You May Like